News December 7, 2025
அம்பேத்கர் பின்னால் ஒளியும் திருமா: பாமக பாலு

தனக்கு ஆபத்து வரும்போது பட்டியல் சமூகம், அம்பேத்கர் பின்னால் திருமா ஒளிந்துகொள்கிறார் என பாமக பாலு விமர்சித்துள்ளார். தன்னை சமூகநீதி காப்பாளராக திருமா கூறிக்கொள்கிறார் எனவும் ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் அவர் வாய்மூடி மௌனியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், TN-ல் அம்பேத்கருக்கு புகழஞ்சலி செலுத்த தகுதியான கட்சி பாமக தான் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News April 7, 2026
விரைவில் விஜய்யின் நேர்காணல்?

அரசியல் களம் கண்டு 3 ஆண்டுகள் ஆகியும் விஜய் இதுவரை பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு விஜய் பேட்டியளிக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஏப்.14-ல் சுமார் 4 மணி நேரத்திற்கு இந்த பேட்டியை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாம். சினிமாவில் இருந்து விலகல், அரசியல் பயணம், எதிர்கால திட்டங்கள் குறித்து அதில் அவர் விவரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
News April 7, 2026
ராகுலுக்கு வயநாட்டில் வீடு உள்ளதா? சீமான்

சீமான் போட்டியிடும் காரைக்குடிக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்று <<19577448>>கார்த்தி சிதம்பரம்<<>> கூறியிருந்தார். இந்நிலையில், நான் அனைத்து தமிழ் மக்களின் செல்ல மகன் என சீமான் பதிலளித்துள்ளார். மேலும், கேரளாவில் போட்டியிட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு ஓட்டும், வீடும் அங்கு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். எனவே, இந்த வீண் பேச்சையெல்லாம் கண்டுகொள்ளக்கூடாது என்றும் அவர் கூறினார்.
News April 7, 2026
3 நாள்கள் பள்ளிகள் விடுமுறை..

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.9-ல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதனையொட்டி ஏப்.8, 9, 10 ஆகிய 3 நாள்கள் அரசு & தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தேவையற்ற தேர்தல் பதற்றங்களை தவிர்க்கும் நோக்கிலும், மாணவர்களின் பாதுகாப்பிற்காகவும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


