News November 1, 2024

அம்பத்தூர் முன்னாள் துணை தாசில்தார் மரணம்

image

அம்பத்தூர், பொன்னேரி, ஆவடியில் தாசில்தாராக பணியாற்றியவர் மணிகண்டன் (55). இவர், கடைசியாக கோயம்பேட்டில் உள்ள சி.எம்.டி.ஏ. அலுவலக சிறப்பு தாசில்தாராக பணியாற்றி வந்தார். தீபாவளி அன்று (அக்.31) நேற்று இரவு 7.30 மணி அளவில் அரியலூர் அருகே அவரது சொந்த ஊரில் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்தபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பலரும், இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News November 20, 2024

இன்று ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து!

image

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. பயணிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, இன்று ஒரு நாளில் மட்டும் புவனேஸ்வர், கொல்கத்தா, பெங்களூர், திருவனந்தபுரம், சிலிகுரி உள்ளிட்ட 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

News November 20, 2024

இலவச மருத்துவ முகாம்கள்: யூஸ் பண்ணிக்கோங்க

image

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் தினந்தோறும் மாலை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.அதேபோல், இன்றும் (நவ.20) சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன. முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது. மாலை 4:30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News November 20, 2024

வேலை தேடும் இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

image

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வரும் நவ.22  தேதி, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க