News March 22, 2024

அமைச்சர் வாகனத்தில் சோதனை

image

கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாடாம்பூண்டி கூட்டு சாலை பகுதியில் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் தீவிர சோதனையில் இன்று (மார்ச்.22 )ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியாக வந்த தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வா.வேலுவின் வாகனத்தை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

Similar News

News August 24, 2025

கள்ளக்குறிச்சி: இருதரப்பின் இடையே தகராறு

image

திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் பகுதியில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று கடைகள் வைப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதில் ஒரு தரப்பினர் திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் திடீரென படுத்துக்கொண்டு சாலை மறியல் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

News August 23, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியர் புதிய அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள், உறவினர்கள், மண்டப உரிமையாளர்கள் மற்றும் அந்த திருமணத்தில் பங்குபெற்ற அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது போன்ற நிகழ்வுகள் நடத்தல் காவல்துறையில் கூற அறிவுரை வழங்கினார்.

News August 23, 2025

க.குறிச்சி: வீட்டில் இருந்தே வரி செலுத்த புதிய வழி

image

கள்ளக்குறிச்சி மக்களே இனி வீட்டு வரி செலுத்துவது (அ) ரசீது பெறுவது தொடர்பாக அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த <>இணையதளம் <<>>மூலம் நீங்கள் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தலாம். மேலும், ரசீதையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யவும்.

error: Content is protected !!