News October 4, 2024
அமைச்சர் ராஜேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக இன்று (அக்.04) காலை சேலம் வருகை தந்த சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், அமைச்சருமான ராஜேந்திரனுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான திமுகவினர், அமைச்சருக்கு மாலை அணிவித்தும், மேள தாளங்கள் முழங்க பட்டாசுகளை வெடித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
Similar News
News November 20, 2024
3300 காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
சேலத்தில் மாநில அளவிலான கூட்டுறவு சங்க வார விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், கூட்டுறவு சங்கத்தில் 3300 காலி பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கான நேர்காணல் நடைபெற்று டிசம்பர் மாத இறுதிக்குள் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், இந்த துறைக்கு வந்துள்ள பல்வேறு கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
News November 20, 2024
71ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
சேலம் நேரு கலையரங்கத்தில் இன்று (நவ.20) கூட்டுறவுத்துறை சார்பில் நடந்த 71ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி, சேலம், கள்ளக்குறிச்சி எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில், தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
News November 20, 2024
சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு
இணைப்பு ரயில்களின் வருகை தாமதம் காரணமாக, கோவை- சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் (12244) இன்று (நவ.20) ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 04.05 மணிக்கும், கோவை- சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (12676) ஒரு மணிநேரம் தாமதமாக மாலை 04.15 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இரண்டு ரயில்களும் சேலம் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும்.