News April 28, 2025
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு

முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பால்வளத்துறை அமைச்சருமான ஆர்.எஸ் இராஜகண்ணப்பனுக்கு நேற்று (ஏப்.27) அமைச்சர் பொன்முடி வகித்து வந்த வனத்துறை மற்றும் காதி துறையை கூடுதலாக ஒதுக்கீடு செய்து ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இதனையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News April 28, 2025
இராமநாதபுரம் காவல்துறை தொலைபேசி எண்கள்

▶️காவல்துறை கண்காணிப்பாளர் -8300034400
▶️கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்
குற்றப்பிரிவு 9498181202
பெண்களுக்கு எதிரான குற்றம்- 9498181202
▶️துணை காவல்துறை கண்காணிப்பாளர் -ஊழல் தடுப்பு பிரிவு -9498215697
துணை காவல்துறை கண்காணிப்பாளர்கள்:
▶️இராமநாதபுரம் -9498101616
▶️இராமேஸ்வரம் -9498101619
▶️பரமக்குடி -9498101617
▶️திருவாடானை -9498101621
▶️கீழக்கரை -9498101620
▶️கமுதி -9498101618 *ஷேர்
News April 28, 2025
முதுகுளத்தூர் அருகே மின்னல் தாக்கி பசு மாடு பலி

முதுகுளத்தூர் அருகே உள்ள கிழவனேரி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் பசு மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று திடீரென பெய்த இடியுடன் மழையில், வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பசு மாடு உயிரிழந்தது. நேற்றைய நாளில் 8 ஆடுகளும் மின்னல் தாக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.
News April 27, 2025
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் ராமநாதபுரம் MP

திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பாக இன்று கோயம்புத்தூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொது செயலாளர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.