News September 2, 2024
அமைச்சர் ரகுபதி சுற்று பயண விபரம்

பொன்னமராவதி வட்டம், அரசமலை கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய அங்காடி கிளையினை அமைச்சர் ரகுபதி நாளை காலை 9மணி அளவில் காரையூரில் திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளை வழங்க உள்ளார்.
Similar News
News August 22, 2025
புதுக்கோட்டை: கல்லூரி மாணவன் பரிதாப பலி!

அறந்தாங்கியை சேர்ந்த சுரேஷ்பாபு (17), பிரகாஷ் (18), சவுந்தர்ராஜ் ஆகிய 3 பேரும் ஆவுடையார்கோவில் அரசு கல்லூரியில் தேர்வு முடித்து விட்டு 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் நானாக்குடி அருகே சென்ற பொழுது எதிர்பாராத விதமாக சரக்கு வேன் மீது மோதியுள்ளனர். இதில் சுரேஷ்பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 2 நபர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News August 22, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணி விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News August 21, 2025
புதுக்கோட்டை: சொந்த தொழில் தொடங்க அறிய வாய்ப்பு?

புதுக்கோட்டை இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <