News March 26, 2024
அமைச்சர் பொன்முடி வழக்கு ஒத்திவைப்பு

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று (மார்ச் 25) விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி ஆஜராகவில்லை மேலும் அரசு தரப்பு சாட்சிகளும் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து வழக்கை இன்றைக்கு (மார்ச் 26) ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.
Similar News
News May 7, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (01.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News May 7, 2025
விழுப்புரம் காவல் அதிகாரிகள் எண்கள்

விழுப்புரம் SP – 9443043687, ADSP – 9443515959, 9445211119, விழுப்புரம் DSP- 9667477902, திண்டிவனம் DSP- 8610456860, செஞ்சி DSP- 8870763199, விக்கிரவாண்டி DSP- 9443034561, கோட்டக்குப்பம் DSP- 9486951354, குற்றப் புலனாய்பு பிரிவு DSP-9444450606, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு DSP- 9498169055. குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
News May 7, 2025
விழுப்புரத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடாக மதுவிற்பனை செய்தால் போலீசில் புகாரளித்து சட்டநடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிலர் முன்னேற்பாடாக மதுபானங்கள் வாங்கி வைத்துக்கொண்டு அதிக லாபத்திற்காக விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து தெரிய வந்தால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க