News April 17, 2025
அமைச்சர் பொன்முடி மீது காவல் நிலையத்தில் புகார்

இந்து மதம் தொடர்பான வனத்துறை அமைச்சர் பொன்முடி பேச்சை கண்டித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கவிதா ஸ்ரீகாந்த் தலைமையில் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இருந்தனர்.
Similar News
News April 19, 2025
புதுக்கோட்டையில் தபால் சேவை குறை தீர்க்கும் முகாம்

புதுகை மாவட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் வருகிற 21ஆம் தேதி பகல் 12 மணி அளவில் புதுகை தலைமை தபால் நிலையம் அலுவலகம் எதிரே உள்ள “மேனா காம்ப்ளக்ஸில்” நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் சேமிப்பு வங்கிக் கணக்கு, காப்பீடு உள்ளிட்ட தங்களது குறைகளை நேரிலோ அல்லது கடிதம் மூலமோ தெரிவிக்கலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)
News April 19, 2025
புதுக்கோட்டை இளைஞரை கௌரவித்த சிங்கப்பூர் அரசு

சிங்கப்பூரில் கடந்த 8ஆம் தேதி, ரிவர் வேலி சாலையில் உள்ள பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் மகன் உள்ளிட்ட 22 பேரை காப்பாற்றிய புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த விஜய ராஜ் உட்பட 4 பேரை சிங்கப்பூர் அரசு பாராட்டி விருது வழங்கி கௌரவித்துள்ளது. சிங்கப்பூர் அரசு அவர்களுக்கு “Community Lifesaver Award” வழங்கி கௌரவித்துள்ளது.
News April 18, 2025
புதுக்கோட்டை: சனிக்கிழமை வழிப்பாட்டுக்கு உகந்த ஸ்தலம்

அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் உள்ளது,இங்குள்ள விஸ்வரூப அஞ்சநேயர் கிழக்கு பார்த்த முகத்தோடு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். வாழ்க்கையில் துன்பங்கள் போக்கும் இந்த அழியா நிலை விஸ்வரூப ஆஞ்சநேயரை வழிப்பட நாளை சனிக்கிழமை உகந்த நாளாகும். இதை உங்க நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.