News March 27, 2024
அமைச்சர் பொன்முடி நடத்தை விதிகளை மீறியதாக புகார்

விழுப்புரம் அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நேற்று (மார்ச் 26) தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பழனியிடம் அளித்த மனுவில், வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் 100 மீட்டருக்கு முன் வாகனத்தை நிறுத்த வேண்டும். ஆனால், விசிக வேட்பாளருடன் மனு தாக்கல் செய்ய வந்திருந்த அமைச்சர் பொன்முடி ஆட்சியர் அலுவலகத்திற்குள் காரில் வந்தார். தேர்தல் நடத்தை விதிகளை மீறிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டிருந்தது.
Similar News
News February 5, 2026
விழுப்புரம்: சமையல் அடுப்பு + சிலிண்டர் இலவசம்!

விழுப்புரம் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News February 5, 2026
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையம் இடம் மாற்றம் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (பிப்.05) நடைபெற்றது.
News February 5, 2026
விழுப்புரம்: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

விழுப்புரம் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <


