News September 19, 2024
அமைச்சர் பதவி விலக கோரி அறிக்கை
திருப்பூர், காங்கேயம் சுற்று பகுதிகளில் வெறிநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழக்கும் சம்பவத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், மக்கள் பணி செய்ய தவறியதால் தார்மீக பொறுப்பேற்று கலெக்டர் மு.பெ.சாமிநாதன் மற்றும் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் பதவி விலக கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2024
போதைபொருள் விற்பனை -கலெக்டர் எச்சரிக்கை!
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து துறைவாரியாக ஆய்வு நடந்தது. மேலும் தடுப்பு நடவடிக்கை மற்றும் கண்காணிப்பை தொடர்ந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். போதைப் பொருள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் எச்சரிக்கை விடுத்தார்.
News November 20, 2024
திருப்பூர்: 265 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளில் உள்ள உள்ளாட்சி தினமான கடந்த ஒன்றாம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கிராம சபை கூட்டம் வருகின்ற 23ஆம் தேதி காலை 11 மணிக்கு அந்தந்த ஊராட்சிகளில் உள்ள பொது இடங்களில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
News November 20, 2024
திருப்பூர்: 13 பணியிடங்களுக்கு 6200 பேர் விண்ணப்பம்
காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் அரண்மனைத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கோவிலில் நிரந்தர பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் என பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கோவிலில் 13 பணியிடங்களுக்கு 6200 பேர் விண்ணப்பித்துள்ளனர்.