News November 16, 2024
அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி மற்றும் மாநாடு

சேலத்தில் இன்று சனிக்கிழமை (16-11-24) காலை 10:30 அமைச்சர் ராஜேந்திரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்நிலையில், அரிசி பாளையம் பகுதியில் உள்ள செயின் மேரிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதி வண்டிகளை வழங்குகிறார். ஒய்.எம்.சி.ஏ ஹாலில் சேலம் மாவட்ட அரசு ஊழியர்கள் மகளிர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் நடைபெற்று மாலையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
Similar News
News March 1, 2026
சேலம் இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

சேலம் மக்களே; வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனை தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 1, 2026
ஆத்தூரில் அடுத்தடுத்து தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்!

பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சந்துரு-வைஷ்ணவி மற்றும் கடம்பூர் சங்கவி-ராஜா ஆகிய இரு காதல் ஜோடிகளும், பெற்றோரின் எதிர்ப்பால் கோவில்களில் திருமணம் செய்துகொண்டு நேற்று ஆத்தூர் காவல் நிலையங்களில் பாதுகாப்பு வேண்டி தஞ்சமடைந்தனர். இதையடுத்து, இருதரப்பு பெற்றோர்களையும் நேரில் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், உரிய அறிவுரைகளை வழங்கி அவர்களை அனுப்பி வைத்தனர்.
News March 1, 2026
சேலம் பழைய பேருந்துநிலையம் அருகே பயங்கர விபத்து!

சேலம் வீராணம் பள்ளிபட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், வலசையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்தார். நேற்று பழைய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அரசுப் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மாநகரப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


