News January 13, 2026
அமைச்சர் துரைமுருகனுக்கு ‘அண்ணா விருது’

2025-ம் ஆண்டுக்கான பேரறிஞர் ‘அண்ணா விருது’ அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்படுவதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். 1965-ம் ஆண்டு நடைபெற்ற மொழிப் போராட்டத்தில் பங்கெடுத்த துரைமுருகன், இலக்கியம், அரசியல் என எப்பொருளிலும் மணிக்கணக்கில் உரையாற்றும் ஆற்றல் பெற்றவர்; அவை முன்னவராக இருந்து சட்டப்பேரவையின் கண்ணியத்தை காக்கும் அவருக்கு அண்ணா விருது வழங்கப்படுவதாக CM தெரிவித்துள்ளார்.
Similar News
News February 16, 2026
மருமகளுக்கு எதிராக மகளை களமிறக்க ராமதாஸ் திட்டம்!

அன்புமணி களமிறக்கும் வேட்பாளர்களை எதிர்த்து தனது வேட்பாளர்களை களமிறக்க ஏற்கெனவே ராமதாஸ் திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் தேர்தலில் சௌமியா அன்புமணி தருமபுரி (அ) பாப்பிரெட்டிப்பட்டியில் போட்டியிடவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால், போட்டியிடும் தொகுதியை சௌமியா அறிவித்த பிறகு அதே தொகுதியில் தனது மகளான ஸ்ரீகாந்தியை களமிறக்க ராமதாஸ் ஆலோசனை நடந்தி வருவதாக கூறப்படுகிறது.
News February 16, 2026
FLASH: வெள்ளி விலை இன்று ஒரே நாளில் ₹15,000 குறைந்தது

கடந்த 5 நாள்களாக மாற்றமின்றி தொடர்ந்த வெள்ளியின் விலை, இன்று ஒரே அடியாக கிலோவுக்கு ₹15,000 குறைந்துள்ளது. இதனால், சில்லறை விலையில் 1 கிராம் வெள்ளி ₹265-க்கும், மொத்த விற்பனையில் பார் வெள்ளி 1 கிலோ ₹2,65,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவால், வெள்ளி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.