News September 18, 2025
அமைச்சர் தலைமையில் முத்தரப்பு கூட்டம் தொடங்கியது!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்.18) அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்ற முத்தரப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சேலம் எம்.பி. டி.எம்.செல்வகணபதி, மேயர் ராமச்சந்திரன், மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, சேகோ சர்வ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News March 9, 2026
சேலம்: ELECTION வருது; சீக்கிரம் CHECK பண்ணுங்க!

சேலம் மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
News March 9, 2026
சேலம்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<
News March 9, 2026
சேலம் காரிப்பட்டி அருகே பயங்கர விபத்து!

சேலம், கருமாபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கணேசன் (52). இவர் நேற்று இரவு கருமாபுரம் அருகே பத்தாங்கல் மேடு பகுதியில், சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து மோதியதில், கணேசன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


