News December 18, 2024

அமைச்சர் சொத்து குறிப்பு வழக்கு ஒத்திவைப்பு

image

தற்போது மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று (டிச.18) வந்த போது விசாரணையை அடுத்த மாதம் ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News

News August 30, 2025

NOTE: தூத்துக்குடியில் இன்று எங்கெல்லாம் பவர் கட்?

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஆக. 30) பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி, ஸ்ரீவை., சாத்தான்குளம், உடன்குடி, நாசரேத், மஞ்சள்நீர்காயல், நாகலாபுரம், பழனியப்பபுரம் உள்ளிட்ட மின் சரக பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 வரை மின் விநியோகம் இருக்காது. எங்கெல்லாம் மின்தடை என விரிவாக தெரிந்துகொள்ள<> இங்கு கிளிக்<<>> செய்யுங்க. தெரியாதவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க

News August 30, 2025

தசரா திருவிழா; சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா, திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி மற்றும் தீபாவளி பண்டிகைகள் நெருங்குவதால், தூத்துக்குடி-திருச்செந்தூர் இடையே கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், மத்திய அமைச்சர் எல். முருகனிடம் மனு அளித்தார்.

News August 30, 2025

தூத்துக்குடி: இரவு ரோந்து காவலர் எண் வெளியீடு

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று இரவு ரோந்து காவல்துறை போலீசாரின் விவரம் மாவட்ட காவல்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக தூத்துக்குடி டிஎஸ்பி மதன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள போலீசார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களின் தொடர்பு எண் மேலே உள்ள படத்தில் உள்ளது.

error: Content is protected !!