News November 23, 2024
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விவசாயிகள் கோரிக்கை

காங்கேயத்தில் நாய்கள் கடித்ததில் இறந்து போன ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரி, விவசாயிகள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், தமிழ்நாடு அரசு இப்பிரச்சினை சம்மந்தமாக கொள்கை முடிவெடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கை சம்பந்தமாக ஆவண செய்வதாக அவர் உறுதியளித்தார்.
Similar News
News October 26, 2025
அமராவதி ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வினோதினி என்பவரின் காது குத்து விழாவிற்காக சென்ற நான்கு பேர் தாராபுரம் வழியாக சென்றபோது அமராவதி ஆற்றில் தண்ணீர் இருப்பதை பார்த்து குளிக்க சென்றனர். அப்போது திருப்பூரைச் சேர்ந்த கார்த்திக் வயது 28 என்ற வாலிபர் எதிர்பாராதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர்.
News October 26, 2025
திருப்பூர்: இரவு நேர காவலர்கள் ரோந்து விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் நேற்று 25.10.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். பல்லடம், அவிநாசி, உடுமலைப்பேட்டை, காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கலாம்.
News October 25, 2025
திருப்பூர்: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை!

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில்<


