News October 27, 2024
அமைச்சர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும் தீபாவளி பரிசு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி அனைத்து அமைச்சர்களுக்கும் தலா 1,000 கிலோ இனிப்புகளும், 1,000 பட்டாசு பெட்டிகளும், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கு தலா 500 கிலோ இனிப்புகளும், 500 பட்டாசு பெட்டிகளும் வழங்கி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
Similar News
News January 26, 2026
புதுவை: தேசியக்கொடியை ஏற்றிய துணைநிலை ஆளுநர்

குடியரசு நாளை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் பல்வேறு படைப்பிரிவினர் மற்றும் என்.சி.சி மாணவர்கள் உள்ளிட்ட பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பெறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக கைலாஷ்நாதன் தேசியக்கொடியை ஏற்றினார்.
News January 26, 2026
புதுவை: மாதம் ரூ.6,000 வேண்டுமா ?

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய <
News January 26, 2026
புதுவை: காவல்துறை சார்பில் இருசக்கர வாகன பேரணி

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை ஒட்டி, புதுச்சேரி காவல்துறை சார்பில் கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்துகொண்டு இருசக்கர வாகன பேரணி மற்றும் இளைஞர்களின் விழிப்புணர்வு நடைபயணத்தை கொடி அசைத்து அசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், சட்டப்பேரவை தலைவர் செல்வம், காவல்துறை இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


