News September 12, 2024

அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி

image

ஊதிய உயர்வு ,தொழிற்சங்க அங்கீகாரம் 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் நான்காவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுடன் துறை அமைச்சர் கணேசன் தலைமையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 11, 2025

காஞ்சிபுரத்தில் ஆதார் கார்டு உள்ளவர்கள் கவனத்திற்கு…

image

myaadhaar என்ற இணையதளத்திற்கு சென்று Document Update என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள். அதற்குள் Click to Submit என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து விவரங்களை கொடுங்கள். Address Proof-க்கான புகைப்படத்தை பதிவேற்றம் செய்யுங்கள். 2026 ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை இதனை இலவசமாக செய்யலாம். இது கடினமாக இருந்தால் இ-சேவை மையங்களுக்கு சென்றும் செய்து கொள்ளலாம். <>உங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையங்கள்.<<>> ஷேர் பண்ணுங்க

News August 11, 2025

காஞ்சிபுரத்தில் 10th, ITI படித்தவர்களுக்கு வேலை

image

சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையான ICF-இல் 1,010 காலி பணியிடங்கள் உள்ளன. கார்பெண்டர், பெயிண்டர், வெல்டர், எலக்ட்ரீசியன், ஃபிட்டர், மெஷினிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இன்று (ஆகஸ்ட் 11) மாலை 5.30 மணிக்குள் இந்த <>இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்

News August 11, 2025

காஞ்சிபுரத்தில் முதல் மனைவி கொடூர கொலை!

image

வாலாஜாபாத்தை சேர்ந்த மதன் தனது 2ஆவது மனைவி சுகன்யா உடன் வாழ்ந்து வந்தார். அண்மையில், முதல் மனைவி லைலா குமாரி உடன் மீண்டும் பழக்கம் ஏற்பட்டு, அவ்வப்போது சந்தித்து பேசி வந்துள்ளார். இதனால் மதன் – சுகன்யா இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. லைலா குமாரி தன்னை வசியம் செய்ததாக நினைத்து, அவரை வனப்பகுதிக்கு வரவழைத்து கொலை செய்துள்ளார். பின்னர், போலீசார் விசாரணையில் உண்மைகள் வெளிவர, சரணடைந்தார்.

error: Content is protected !!