News July 22, 2024
அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கற்பகம் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு, சென்னையில் தொழில் மற்றும் வணிகத் துறை கூடுதல் ஆணையராக பணிபுரிந்து வந்த கிரேஸ் வால்ரின்டிகி பச்சாவ் என்பவர் பெரம்பலூர் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், இன்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை புதிய ஆட்சியர் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Similar News
News August 20, 2025
பெரம்பலூர்: கோழி பண்ணை அமைக்க 50% மானியம்

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க! (<<17460341>>பாகம்-2<<>>)
News August 20, 2025
பெரம்பலூர்: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (2/2)

▶️ இதற்கு தகுதியாக குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்
▶️ மின் இணைப்பு இருக்க வேண்டும்
▶️ ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை
▶️ தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News August 20, 2025
பெரம்பலூர்: அப்பளம் போல் நொறுங்கிய கார்-ஒருவர் பலி

திருச்சி, செங்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (52), இவருடைய மகன் ஈஸ்வரன் (18), பாஸ்கரின் நண்பரான பெரம்பலூர் மாவட்டம் டி.களத்தூர் ரெட்டியார் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (54) மற்றும் ஓட்டுநர் தனபால் (53) ஆகியோர் சென்னை நோக்கி சென்றபோது, பின்னால் வந்த ஒரு வாகனம் கார் மீது மோதியதில், கார் உருண்டு சாலையோர பள்ளத்தில் விழுந்தது. இதில் பாஸ்கர் உயிரிழந்தார். ஈஸ்வரன் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.