News January 10, 2026
அமைச்சரவையில் இடம் கேட்டு பாஜக அழுத்தமா? நயினார்

ஆட்சியில் பங்கு வேண்டும் என பாஜக, இதுவரை அதிமுகவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் கூட்டணியில் எத்தனை இடங்களில் போட்டி என்பதை உறுதி செய்த பின்னர் அறிவிப்போம் என்ற அவர், இரட்டை இலக்கத்தில் BJP MLA-க்கள் பேரவைக்கு செல்வது உறுதி என்றார். முன்னதாக, ஆட்சியில் பங்கு, 3 அமைச்சர் பதவிகளை கேட்டு EPS-க்கு பாஜக அழுத்தம் கொடுப்பதாக பேச்சு எழுந்தது.
Similar News
News January 30, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News January 30, 2026
இந்து விரோத திமுகவை மக்கள் தூக்கியெறிய வேண்டும்: H ராஜா

இந்து கோவில் சம்பந்தப்பட்ட விசயத்தில் திமுக அரசு தலையிட எந்த அதிகாரமும் இல்லை என H.ராஜா தெரிவித்துள்ளார். மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஹைகோர்ட் கொடுத்த தீர்ப்பை நிறைவேற்றவில்லை என்றும், தீர்ப்பு கொடுத்த நீதிபதிக்கு எதிராக தங்களது கூலி ஆட்களை வைத்து போராட்டம் நடத்தினர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் இந்து விரோத திமுக அரசை மக்கள் தூக்கியெறிய வேண்டும் எனவும் பேசியுள்ளார்.
News January 30, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 596 ▶குறள்: உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. ▶பொருள்: நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது.


