News December 30, 2024
அமெரிக்க முன்னாள் அதிபர் காலமானார்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் (100) நேற்று இரவு காலமானார். நீண்ட காலமாக உடல் நலக்குறைவாக இருந்த அவர், ஜார்ஜியாவில் உள்ள வீட்டில் காலமானதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 1977-1981 வரை பொருளாதார நெருக்கடிகளால் சூழப்பட்ட நிலையிலும் சிறப்பாக பணியாற்றினார். நீண்ட காலம் வாழ்ந்த US ஜனாதிபதி என்ற சாதனையை கார்ட்டர் பெற்றுள்ளார்.
Similar News
News August 15, 2025
கட்டணத்தை உயர்த்திய SBI

வங்கிக் கணக்கில் இருந்து IMPS டிரான்ஸ்பர் முறையில் பணம் பரிமாற்றம் செய்வதற்கான கட்டணங்களை உயர்த்துவதாக SBI வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, ₹25,000 வரையான தொகைக்கு கட்டணம் இல்லை. ஆனால், ₹25,000 முதல் ₹1,00,000 வரை- ₹2+GST, ₹1,00,000 முதல் ₹2,00,000 வரை- ₹6+GST, ₹2,00,000 முதல் ₹5,00,000 வரை- ₹10+GST கட்டணம் இருக்கும். இந்த புதிய கட்டண விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
News August 15, 2025
2050-ல் ₹1 கோடியின் மதிப்பு என்ன?

இன்று உங்கள் கையில் ₹1 கோடி இருந்தால், 2050-ல் அதன் மதிப்பு ₹29.53 லட்சத்திற்கு சமமாக இருக்கும். இன்று ₹1 கோடிக்கு கிடைக்கும் வீடு, 2050-ல் ₹3.4 கோடியாக இருக்கும். இதற்கு காரணம் பணவீக்கம். பொருட்களின் விலை அதிகரித்து மக்களின் வாங்கும் திறன் குறையும். கடந்த 20-25 ஆண்டுகளில் சராசரி பணவீக்கம் 6%-க்கும் அதிகமாக உள்ள நிலையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு 5% என்று தொடர்ந்தால் கூட மேற்கூறியதுதான் நடக்கும்.
News August 15, 2025
5000 சீன வீரர்களை ஓடவிட்ட 120 இந்திய வீரர்கள்

இது திரைப்பட கதையல்ல, 1962 இந்திய- சீன போரில் ஈடுபட்ட நம் வீரர்களின் உண்மைக் கதை. லடாக்கில், 16,000 அடி உயரத்தில் ரேசாங் லா பனிமலையில் 5000 வீரர்களுடன் சீனப்படை முன்னேறியது. அவர்களை வெறும் 120 வீரர்களுடன் எதிர்கொண்டார் மேஜர் சைத்தான் சிங் பாட்டி. அலையலையாய் வந்த சீனர்களை, கடைசிமூச்சு உள்ளவரை எதிர்த்து போரிட்டனர் நம் வீரர்கள். 110 பேர் வீரமரணம் அடைந்தாலும், இறுதியில் லடாக்கை காத்தது வீரவரலாறு!