News August 29, 2025

அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க வேண்டுகோள்

image

ஈரோடு, இந்து முன்​னணி சார்பில், கோபி​யில் நடை​பெற்ற விநாயகர் சதுர்த்தி விழா​வில் பங்​கேற்ற ஹெச்​.​ராஜா,பின்​னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்​தி​யா​வுக்கு எதி​ராக அமெரிக்கா 50% வரி​விதித்​துள்​ளது. இதனால், முன்னாள் பிரதமர் மன்மோகன்​சிங் காலத்​தில் கொண்​டு​வரபட்ட ‘காட்’ உடன்​படிக்கை தோற்​றுப்போயுள்ளது. நாட்டு மக்​கள் சுதேசி உற்பத்​திப் பொருட்​களை வாங்க வேண்டும் என இவ்வாறு தெரிவித்தார்.

Similar News

News September 1, 2025

ஈரோடு: அரசு பேருந்தில் Luggage-ஐ மறந்துவிட்டீர்களா?

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.(ஷேர் பண்ணுங்க)

News September 1, 2025

ஈரோடு: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா?

image

ஈரோடு மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <>இங்கு கிளிக்<<>> செய்து உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வுசெய்து ஆவணங்களை சமர்ப்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும்.(SHARE IT).

News September 1, 2025

தக்காளி விலை கடும் வீழ்ச்சி விவசாயிகள் கவலை!

image

கோபிசெட்டிபாளையம் மார்க்கெட் பகுதியில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக தக்காளி வரத்துக் குறைந்ததால் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 60 வரை விற்பனையானது. பல தற்பொழுது தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் கிலோ ஒன்றுக்கு ரூ. 30 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் தக்காளி விவசாயம் செய்துள்ள விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

error: Content is protected !!