News December 31, 2025

அமெரிக்காவை தொடர்ந்து சீனாவும்…

image

இந்தியா-பாக்., மோதலின் போது, 3-ம் தரப்பு மத்தியஸ்தம் நடைபெறவில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஆனால், தானே முன்னின்று தீர்த்து வைத்ததாக டிரம்ப் சொல்லி வருகிறார். தற்போது அவரைத்தொடர்ந்து சீனாவும் உரிமை கொண்டாடியுள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது இரு நாடுகளுக்கும் இடையே பெய்ஜிங் மத்தியஸ்தம் செய்ததாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளது விவாதத்தை எழுப்பியுள்ளது.

Similar News

News January 1, 2026

திருப்பத்தூர்: முதியவர் உடல் சிதறி பலி!

image

திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் இன்று (ஜன.1) சுமார் 60 வயது தக்க முதியவர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முதியவர் மீது மோதியது. இதில் முதியவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 1, 2026

திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்: சசிகலா

image

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை பழக்கம் அதிகரித்துள்ளது; இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என சசிகலா கேள்வி எழுப்பினார். ஒருபுறம் ஆசிரியர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறனர்; மறுபுறம் ரவுடிசம் தலை தூக்கியுள்ளது. இதில் இருந்தே தெரிகிறது CM ஸ்டாலினுக்கு நிர்வாகம் செய்ய தெரியவில்லை என்பது என விமர்சித்த அவர், இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவதுதான் என்னுடைய வேலை என்றார்.

News January 1, 2026

2026 எப்படி இருக்கும்? கணிப்புகள் வெளியானது

image

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவின் கணிப்புகள் உலக பேமஸ். 2025-ம் ஆண்டில் கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும், பூகம்பங்கள் ஏற்படும், வெள்ளம் வரும், வேலையின்மை அதிகரிக்கும் என கணித்திருந்தார். இந்நிலையில் 2026-க்கான இவருடைய கணிப்புகளை செய்தியாக தொகுத்துள்ளோம். அது என்ன என்பதை தெரிந்துகொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. இதை பிறருக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!