News December 25, 2025

அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது

image

அமெரிக்காவில் ஏற்கெனவே குடியேற்ற கொள்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சமீபகாலமாக உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்துக்களில் வாகனங்களை ஓட்டியவர்கள் சட்டவிரோத குடியேறிகள் என கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் பெரும்பாலானோர், முறையான உரிமம் இன்றி கனரக வாகனங்களை ஓட்டிய இந்தியர்கள் என தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில், 30 இந்தியர்கள் உள்பட 49 பேரை அமெரிக்க எல்லை பாதுகாப்பு படை கைது செய்துள்ளது.

Similar News

News December 25, 2025

கிறிஸ்துமஸ் கொண்டாடிய பிரபலங்கள் (PHOTOS)

image

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இந்நிலையில் சினிமா நட்சத்திரங்களும், பிரபலங்களும் தங்களது கிறிஸ்துமஸ் கொண்டாட்ட போட்டோக்களை SM-ல் பகிர்ந்து ரசிகர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தமன்னா தொடங்கி ஸ்மிருதி மந்தனா வரை ஒவ்வொருவரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கே உரித்தான Red, White தீமில் ஜொலிக்கின்றனர். அந்த போட்டோக்களை மேலே Swipe செய்து பார்க்கவும்.

News December 25, 2025

விந்தணு தானம்: டெலிகிராம் CEO கொடுத்த ஜாக்பாட்

image

தனது விந்தணு மூலமாக IVF சிகிச்சையில் குழந்தை பெற்றுக்கொள்ளும் 37 வயது பெண்களின் அனைத்து செலவையும் ஏற்பதாக டெலிகிராம் CEO பாவெல் துரோவ் பேசியுள்ளதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. பாவெல் துரோவின் விந்தணு தானத்தின் மூலம் ஏற்கெனவே 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன. அக்குழந்தைகளுக்கு தனது சொத்துக்களை பிரித்து வழங்குவதாக அவர் ஏற்கெனவே ஜாக்பாட் அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.

News December 25, 2025

இதில் யார் ரோஹித் சர்மா? கண்டுபிடியுங்க

image

நேற்று VHT-ல் சிக்கிமிற்கு எதிராக விளையாடிய ஹிட்மேன் <<18659415>>ரோஹித் 155 ரன்கள் விளாசி<<>> பட்டையை கிளப்பினார். இந்நிலையில், பீல்டிங்கின் போது விக்கெட் கீப்பர் ஹர்திக் தாமோருடன் ரோஹித் சர்மா இருக்கும் போட்டோ SM-ல் வைரலாகியுள்ளது. ஏனெனில், இதில் இருவரும் இரட்டையர்கள் போல தெரிகின்றனர். ஜீன்ஸ் பட செந்தில் போல், ரோஹித் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் ரசிகர்கள் தவிக்கிறார்கள். நீங்க சரியான பதிலை கமெண்டல சொல்லுங்க

error: Content is protected !!