News September 22, 2024

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

image

USA-வில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பேர் பலியாகினர். அலபாமாவின் பர்மிங்காமில் ஹோட்டலுக்கு வெளியே மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Similar News

News August 22, 2025

நடிகை ரித்விகாவின் திருமணம் தள்ளி போனது..!

image

பிக்பாஸ் 2-வது சீசன் வின்னரும் பிரபல நடிகையுமான ரித்விகாவின் திருமணம் கடைசி நேரத்தில் தள்ளி போயுள்ளது. இவருக்கும் வினோத் லட்சுமணன் என்பவருக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆக. 27-ல் திருமணம் நடைபெற இருந்த நிலையில், குடும்ப சூழல் காரணமாக ரித்விகா தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கபாலி, மெட்ராஸ், ஒருநாள் கூத்து உள்ளிட்ட பல படங்களில் ரித்விகா நடித்துள்ளார்.

News August 22, 2025

BREAKING: இனி ₹2 லட்சம்.. தமிழக அரசு அறிவிப்பு

image

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான இழப்பீடு தொகையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விபத்து மரணத்திற்கான இழப்பீட்டை ₹1 லட்சத்தில் இருந்து ₹2 லட்சமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. விபத்தில் உடல் உறுப்பை இழந்தால் இனி ₹1 லட்சம்(முன்பு ₹20 ஆயிரம்) வழங்கப்படும். அதேபோல், இனி இயற்கை மரணத்திற்கு ₹30 ஆயிரமும், இறுதிச் சடங்கு செய்ய ₹10 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News August 22, 2025

மீண்டும் வருகிறது ‘டிக் டாக்’?

image

ஒருகாலத்தில் இந்தியர்களை பைத்தியமாக்கியது, டிக் டாக் செயலி. பாதுகாப்பு காரணங்களுக்காக 5 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு இதை தடைசெய்தது. இந்நிலையில் இந்தியாவில் மீண்டும் டிக் டாக் வரலாம் என தகவல் உலா வருகிறது. டிக் டாக் வெப்சைட் இந்தியாவில் இன்னும் ஆக்டிவாக இருப்பதாகவும், பலரால் அதை ஆக்சஸ் செய்ய முடிவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், டிக் டாக் செயலி அவைலபிளாக இல்லை. நீங்க டிக் டாக்கை வரவேற்பீர்களா?

error: Content is protected !!