News December 11, 2025
அமித்ஷா பதிலில் பதட்டம் தெரிந்தது: ராகுல்

மக்களவையில் வாக்கு திருட்டு குறித்த அமித்ஷாவின் பதிலில் பதட்டம் தெரிந்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாஜகவினருக்கு பல மாநிலங்களில் வாக்குரிமை இருப்பது பற்றியோ, தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்து CJI நீக்கியது குறித்தோ அவர் எந்த பதிலையும் அளிக்கவில்லை. CCTV வழங்கப்படாததற்கு அவர் கூறிய காரணம் அபத்தமாக இருந்ததாகவும் ராகுல் விமர்சித்துள்ளார்.
Similar News
News March 6, 2026
பைக்குகளுக்கு மார்ச் மாத சலுகைகள்!

பைக் வாங்க பிளான் பண்ணியிருக்கீங்களா? மார்ச் மாத சிறப்பு சலுகைகள் தொடங்கி உள்ளன. Hero மற்றும் Suzuki தனது பைக்குகளுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹1,000 முதல் அதிகபட்சமாக ₹3,000 வரை சலுகைகளை அறிவித்துள்ளன. எந்தெந்த மாடல் பைக்குகளுக்கு எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என மேலே உள்ள போட்டோக்களை இடப் பக்கம் ஸ்வைப் செய்து தெரிந்து கொள்ளுங்கள். SHARE IT.
News March 6, 2026
மறதிக்கு முன்பே அல்சைமரை கண்டறியலாம்

நினைவாற்றல் குறையும் போதுதான் அல்சைமர் நோய் தொடங்க வேண்டும் என்பதில்லை. இது 15-20 ஆண்டுகளுக்கு முன்பே மூளையில் சத்தமாக தொடங்குகிறது. இதன் அறிகுறிகள் எப்போது தொடங்கும் என்பதை p-tau217 எனப்படும் புரதத்தை கண்டறியும் ரத்த பரிசோதனை மூலம் நோயை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிய முடியும் என்று நரம்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இது நோயை சீக்கிரம் கண்டறிந்து, விரைவாக சிகிச்சையை தொடங்க உதவுகிறது.
News March 6, 2026
துபாய் மக்களுக்கு ஏவுகணை தாக்குதல் அலர்ட்!

ஈரானின் ஏவுகணை தாக்குதலால் துபாய், அபுதாபி, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் பதற்றத்தில் உள்ளன. இதனிடையே, துபாய் மக்களுக்கு ஏவுகணை தாக்குதல் குறித்த எச்சரிக்கை செல்போன் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. துபாயில் ஏராளமான தமிழர்கள் வசித்துவரும் நிலையில், அவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப ஏற்பாடு செய்யவும் கோரிக்கை வலுத்துள்ளது.


