News December 14, 2025
அமித்ஷாவை சந்திக்கிறார் நயினார்

டெல்லி சென்றுள்ள நயினார் நாகேந்திரன், இன்று இரவு அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. TTV, OPS-ஐ மீண்டும் NDA கூட்டணியில் இணைத்தால், தென் மாவட்டங்களில் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கலாம் என்று பாஜக கணக்கு போடுகிறதாம். ஆனால், அதற்கு EPS பிடிகொடுக்காமல் உள்ளாராம். எனவே, அமித்ஷாவிடம் இதுகுறித்தும், கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது குறித்தும் நயினார் பேசவுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News March 1, 2026
சிக்கன் சாப்பிட்டால் ஆபத்து.. உடனே இதை பாருங்க

அசைவ பிரியர்களின் பிடித்தமான உணவாக சிக்கன் உள்ளது. அடிக்கடி சிக்கன் சாப்பிட பலரும் விரும்புகின்றனர். இந்நிலையில், தினமும் சிக்கன் சாப்பிட்டால், அதிலுள்ள கலோரி, கொழுப்பினால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், வறுத்த சிக்கனில் இருக்கும் கொழுப்பு, எண்ணெய் ஆகியவை உடலில் கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துவதால் இதய பிரச்னை ஏற்படலாம். அதனால், அளவாக சிக்கன் சாப்பிடுவதே நல்லது.
News March 1, 2026
கடந்தாண்டை விட 8.1% எகிறிய ஜிஎஸ்டி வசூல்!

பிப்ரவரி மாத GST வசூல் 1.83 லட்சம் கோடி என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தை விட 8.1% அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டு மாதம் என்பதால் மார்ச் மாதத்தில் வரி வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களை பொறுத்தவரை அதிகபட்சமாக மகாராஷ்டிரா ₹16,581 கோடி வசூலித்துள்ள நிலையில், தமிழகம் ₹6,811 கோடி GST வசூலித்துள்ளது.
News March 1, 2026
மகளிர் வங்கிக் கணக்கில் ₹25,000.. FACTCHECK

‘Women Work from Home Scheme’ திட்டத்தின்கீழ் மகளிருக்கு வீட்டிலிருந்து பணிபுரியும் வாய்ப்பை வழங்கி, மாதம் ₹25,000 சம்பளம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக SM-ல் தகவல் பரவி வருகிறது. இது பொய்யானது என மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பகம் (PIB FACTCHECK) விளக்கம் அளித்துள்ளது. இதுபோன்ற போலி தகவல்களை 87997 11259 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையை அறியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


