News October 26, 2025
அமராவதி ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வினோதினி என்பவரின் காது குத்து விழாவிற்காக சென்ற நான்கு பேர் தாராபுரம் வழியாக சென்றபோது அமராவதி ஆற்றில் தண்ணீர் இருப்பதை பார்த்து குளிக்க சென்றனர். அப்போது திருப்பூரைச் சேர்ந்த கார்த்திக் வயது 28 என்ற வாலிபர் எதிர்பாராதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 26, 2025
திருப்பூர்: ரூ.12,000 வேண்டுமா? APPLY NOW

திருப்பூர்: பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 வழங்கப்படுகிறது. இதற்கு https://scholarships.gov.in என்ற இணையதளம் வாயிலாக அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
News October 26, 2025
விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் ரத்து

திருப்பூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குப்பை பிரச்சனை தொடர்பாக விவசாயிகள் முற்றுகை இடுவதாக தெரிவித்திருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News October 26, 2025
திருப்பூர்: பள்ளியில் வேலை.. ரூ.2 லட்சம் வரை சம்பளம்

மத்திய அரசின் ஏகலைவா உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள பள்ளி முதல்வர், ஆசிரியர், விடுதி காப்பாளர், ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 10th, 12th, டிகிரி முடித்து இருக்க வேண்டும். சம்பளம் ரூ.18,000 முதல் அதிகமா ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கு https://nests.tribal.gov.in/ என்ற இணையளத்தில் விண்ணப்பிக்கவும். அக்.28-ம் தேதி கடைசி. (அரசு வேலை தேடும் நபருக்கு SHARE பண்ணுங்க)


