News August 16, 2024

அமராவதி ஆற்றில் மூழ்கிய மாணவன் சடலமாக மீட்பு

image

தாராபுரம் பைபாஸ் சாலையில் உள்ள அமராவதி ஆற்றுப்பாலத்தின் கீழ் நேற்று குளிக்கச் சென்ற ஆறு மாணவர்களில் 5 மாணவர்கள் தண்ணீரில் இருந்து வெளியே வந்தனர். ஒரு மாணவன் மட்டும் நீரில் மூழ்கினார். இதை அடுத்து தீயணைப்பு துறையினர் தீவிரமாக இரண்டாவது நாளாக தேடி வந்த நிலையில் உயிரிழந்த மாணவனின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

Similar News

News November 9, 2025

திருப்பூரில் கைது! ஏன் தெரியுமா?

image

அவிநாசி அருகே சின்னேரிபாளையம் ஊராட்சி, கணேசபுரம் வைஷ்ணவி கார்டனில், வெளிநாட்டினர் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் படி நேற்று முன்தினம் டி.எஸ்.பி. சிவகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜபிரபு உள்ளிட்ட போலீசார் வீடுகளில் சோதனை நடத்தினர். அதில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட நான்கு பேர் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததற்காக கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

News November 9, 2025

திருப்பூரில் இங்கெல்லாம் மின்தடை

image

உடுமலை இந்திரா நகர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை நவ.10-ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே, உடுமலை மின் நகர், இந்திரா நகர், சின்னப்பன்புதூர். ராஜாவூர், ஆவல்குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், தூங்காவி, ராமேகவுண்டன் புதூர், மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.புதூர் ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது.

News November 9, 2025

திருப்பூரில் இரவு நேர ரோந்து போலீசார் விபரம்!

image

திருப்பூர் மாநகரில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கவும் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் திருப்பூர் மாநகர உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில், இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய போலீசார், பட்டியல் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!