News October 9, 2024
அமமுக செயலாளர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது

திண்டிவனம் அடுத்த பட்டணம் இந்திரா நகரை சேர்ந்த தம்பதிகளான முத்து, எல்லம்மாள்(50) இடத்திற்கு அருகில் தன்ராஜ் என்பவரின் இடம் உள்ளது. தன்ராஜின் இடத்தை எல்லம்மாள் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி அமமுக தெற்கு மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான முத்து தலைமையிலான கும்பல் எல்லம்மாளை திட்டியும், தாக்குதல் நடத்தி வீட்டை இடிக்க முயன்றதாக ரோசணை போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் முத்துவை கைது செய்தனர்.
Similar News
News August 19, 2025
விழுப்புரம்: டிகிரி போதும்.. வங்கி வேலை ரெடி!

தமிழகம் முழுவதும் உள்ள ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒருதுறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ரூ.24,050 – ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். செப்.9ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். வயது வரம்பு, விண்னப்பக்கட்டணம் உள்ளிட்ட தகவல்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <
News August 19, 2025
விழுப்புரம் : B.E படித்தவர்களுக்கு ஏர்போர்ட் வேலை!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 976 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்டக்கலை, சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் பி.இ, பி.டெக், எம்.சி.ஏ மற்றும் கேட் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். ரூ.40,000 – ரூ.1,40,000 வரை சம்பளம். செப்.27ம் தேதி கடைசிநாள் <
News August 19, 2025
பௌத்தர்கள் புனித யாத்திரைக்கு மானியம் பெற விண்ணப்பம்

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், நாக்பூரில் நடைபெற உள்ள தம்ம சக்கர பரிவர்த்தனை திருவிழாவிற்கு சென்று திரும்பும் 150 பௌத்தர்களுக்கு, தமிழக அரசு தலா ரூ.5000 வரை மானியம் வழங்குகிறது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணம் இன்றி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். வருகின்ற நவ.30 விண்ணப்பிக்க கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.