News January 21, 2026
அமமுகவுக்கு 8 தொகுதிகளா? முற்றுப்புள்ளி வைத்த TTV

NDA கூட்டணியில் இணைந்துள்ள அமமுகவுக்கு 8 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தற்போது கூட்டணியில் மட்டுமே இணைந்துள்ளோம்; தொகுதிப் பங்கீடு குறித்து இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று TTV விளக்கமளித்துள்ளார். தொகுதிப்பங்கீடு தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். அதுவரை, உண்மைக்கு புறம்பான செய்திகளை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News February 9, 2026
ஜப்பானின் புதிய பிரதமருக்கு PM மோடி வாழ்த்து!

வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்றுள்ள ஜப்பான் புதிய பிரதமர் சானே டகாயிச்சிக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது X பதிவில், நமது சிறப்புமிக்க உலகளாவிய கூட்டாண்மை, உலக அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், தங்கள் திறமையான தலைமையின் கீழ், இந்தியா-ஜப்பான் நட்புறவை மேலும் புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வோம் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார்.
News February 9, 2026
தவெகவிற்கு மட்டும் அதிக நிபந்தனைகள் ஏன்? கார்த்தி

அதிக ரசிகர்களை கொண்ட விஜய், அனைத்து கட்சிகளிடம் இருந்தும் கணிசமான வாக்குகளை பறிப்பார், ஆனால் அவை சீட்டாக மாறுமா என்பது சந்தேகமே என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யின் கூட்டங்கள் வழக்கமான கட்சி கூட்டம் போல் இல்லாமல், ஏதோ சினிமா கச்சேரி போன்று நடைபெறுகிறது. அதோடு அவர் கூட்டத்தில் தான் அசம்பாவிதம் ஏற்பட்டதால் தவெகவிற்கு அதிக நிபந்தனைகள் அதிகமாக விதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
News February 9, 2026
ரத்தான TNPSC குரூப் 2 தேர்வு எப்போது?

ரத்து செய்யப்பட்ட TNPSC Group 2 முதன்மைத் தேர்வு குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தப்படும் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த சண்முகசுந்தரம் தெரிவித்தார். மேலும், இதற்கான ஹால் டிக்கெட், தேர்வு நடைபெறும் 15 நாள்களுக்கு முன்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், பிப்.22-ல் நடைபெறவுள்ள குரூப் 2 பொது அறிவு (தாள் 2) வழக்கமாக நடைபெறும் என்றும் தெரிவித்தார்.


