News January 27, 2026
அப்போ டார்ச் லைட்டை OFF பண்ண வேண்டியது தானா?

டார்ச் சின்னம் மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில், குறைந்தது 12 தொகுதிகளில் போட்டியிட கமலின் மநீம விரும்புகிறது. இதுகுறித்து திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்திருந்தது. ஆனால் ஒற்றை இலக்க தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்றும், உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தி வருகிறது. இதனால் டார்ச் லைட்டை ON செய்யவே முடியாதா என மநீம தரப்பு தவித்து வருகிறது.
Similar News
News February 2, 2026
மத்திய பட்ஜெட்டின் டாப் 10 சிறப்புகள்.. (2/2)

*தமிழகத்தில் அரியவகை கனிமங்களுக்கான வழித்தடம் *வெளிநாடு சுற்றுலா பேக்கேஜ்களுக்கு வரி 2% ஆக குறைப்பு * நாடு முழுவதும் மாவட்டம் தோறும் பெண்களுக்கான விடுதி *மருத்துவ சுற்றுலாவை அதிகரிக்க 5 மருத்துவ முனையங்கள் அமைப்பு *இந்தியாவில் உள்ள டேட்டா மையங்களுக்கு 2047-ம் ஆண்டு வரை வரி விலக்கு
News February 2, 2026
மத்திய பட்ஜெட்.. சைலண்ட் மோடில் விஜய்

மத்திய பட்ஜெட்டை அதிமுக வரவேற்றுள்ள நிலையில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இதனிடையே, பட்ஜெட் குறித்து விஜய் மட்டுமின்றி தவெக தலைவர்கள் யாரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே, சமூகம் சார்ந்த பல பிரச்னைகளுக்கு விஜய் தாமதமாக குரல் கொடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இன்று நடக்கும் தவெக 3-ம் ஆண்டு விழாவில் இதுபற்றி பேசுவாரா என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 2, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 2, தை 19 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: பிரதமை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்


