News December 7, 2025

‘அப்பா SORRY.. நான் சாகப் போகிறேன்’

image

‘அப்பா, என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் என்னால் தாங்க முடியாது. என் சாவுக்கு வேறு யாரும் காரணமில்லை, நான் மட்டுமே பொறுப்பு’. ம.பி., போபாலில் அக்கவுண்டண்டாக பணியாற்றி வந்த சுஜாதாவின்(27) கடைசி வரிகள் இவை. தீராத நோய் பாதிப்பில் இருந்த அவர், தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டது பெரும் சோகம். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை உணருங்கள் நண்பர்களே!

Similar News

News April 8, 2026

லோன் வாங்கியவர்களுக்கு RBI மகிழ்ச்சி அறிவிப்பு

image

குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என RBI கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா அறிவித்துள்ளார். ரெப்போ வட்டி விகிதம் 5.25% ஆக தொடரும் என்ற அறிவிப்பால் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டியில் மாற்றம் ஏதும் இருக்காது. ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கிய நிதியாண்டில் RBI வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக பேசப்பட்ட நிலையில், வட்டி விகிதம் மாறாதது கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

News April 8, 2026

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலும் ஆதரவு

image

ஈரான் உடனான போரை 2 வாரங்கள் நிறுத்தும் அறிவிப்பை டிரம்ப் வெளியிட்ட நிலையில், இஸ்ரேல் கருத்து எதுவும் கூறாமல் இருந்தது. இதனால், அமெரிக்கா போரை நிறுத்தினாலும், ஈரானை இஸ்ரேல் தாக்கக்கூடும் என சந்தேகம் நிலவியது. இந்நிலையில் டிரம்புடன் தொலைபேசியில் பேசிய நெதன்யாகு, போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதேநேரம், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதல் தொடரும் எனவும் கூறியுள்ளார்.

News April 8, 2026

தவெகவுக்கு ஆதரவு: திமுக Ex MLA மகன் நேரடி பிரசாரம்

image

அறந்தாங்கி திமுக Ex MLA மகன் சரண், அத்தொகுதியின் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளது, கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. 2011 முதல் காங்.,கின் திருநாவுக்கரசர் குடும்பமே இத்தொகுதியில் MLA-வாக இருக்கின்றனர். தற்போது களமிறங்குபவரும், சிட்டிங் MLA-வுமான அவரது மகன் ராமச்சந்திரன் கண்டிப்பாக டெபாசிட் இழப்பார் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!