News February 7, 2026
அப்பா இஞ்சின் தான் டப்பா இஞ்சின்: தமிழிசை

திமுகவுக்கு ஜீரோவுக்கு கீழே மார்க் இருந்தால் தரலாம் என தமிழிசை கூறியுள்ளார். தங்களை டப்பா இஞ்சின் என கூறுவதற்கு பதிலளித்த அவர், அப்பா இஞ்சின்தான் டப்பா அரசாங்கமாக இருக்கிறது என கூறியுள்ளார். மேலும், பேட்டரியே இல்லாத எஞ்சின் காங்கிரஸ்தான் எனவும், வெற்றியே பெறாத காங்கிரஸ், வீக்கான பேட்டரி கொண்ட டார்ச் லைட்டையெல்லாம் வைத்துக்கொண்டு இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் எனவும் கிண்டல் செய்திருக்கிறார்.
Similar News
News February 18, 2026
வரலாற்றில் இன்று

▶1836 – ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த தினம்▶1911 – உலகின் முதல் அதிகாரப்பூர்வ வான்வழித் தபால் சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டது.▶1930 – புளூட்டோ குறுங்கோள் கண்டுபிடிக்கப்பட்டது. ▶1979 – வரலாற்றில் முதல்முறையாக ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டது. ▶2007 – இந்தியா-பாகிஸ்தான் இடையே இயக்கப்பட்ட சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த குண்டுவெடிப்பில் சுமார் 68 பேர் உயிரிழந்தனர்.
News February 18, 2026
ஒவ்வொரு குடிமகன் மீதும் ₹1.27 லட்சம் கடன்: அன்புமணி

70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ₹4.96 லட்சம் கோடி கடனை திமுக அரசு வாங்கியுள்ளதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். ஒவ்வொரு குடிமகன் மீதும் ₹1.27 லட்சம் கடன் சுமை உள்ளதாகவும், பழைய கடனை அடைக்க புதிய கடன் ₹55,844 கோடியை தமிழக அரசு வாங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மூலதன செலவுகளை விட 3.5 மடங்கு அதிகமான கடன் வாங்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
News February 18, 2026
இந்த சட்டையின் விலை ரூ.1 லட்சமா!

ஃபேஷன் உலகில் எப்போதும் புதுமைகளுக்கு பஞ்சமில்லை. விநோதமான ஸ்டைல்கள் கூட சில நேரங்களில் ஃபேஷனாக மாறும். அந்த வகையில், பிரபல சர்வதேச பிராண்டான VETEMENTS-ன் ஒரு சட்டை பிரபலமடைந்துள்ளது. அயன் செய்யும்போது சூடு அதிகரித்தால் ஏற்படும் பழுப்பு நிற கரை தற்போது புது டிசைனாக மாறியுள்ளது. இந்த சட்டையின் விலை தோராயமாக ₹1 லட்சம். இந்த ஃபேஷன் குறித்து உங்கள் கருத்து என்ன?


