News January 6, 2026

அப்பாவின் கண்டிப்பால் விபரீத முடிவெடுத்த மாணவன்

image

இப்போதுள்ள மாணவர்கள் சின்ன சின்ன விஷயங்களுக்கே மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். படிப்பில் கவனம் செலுத்தாமல் செல்போனில் அதிக நேரம் செலவிட்ட மாணவன், தந்தை திட்டியதால் விபரீத முடிவை எடுத்த சம்பவம் சேலம் எருமாபாளையம் பகுதியில் நடந்துள்ளது. தந்தை அருளின் கண்டிப்பால் மனமுடைந்த 17 வயது மகன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்தது பெரும் சோகம். தற்கொலை எதற்கும் தீர்வல்ல என உணருங்கள்!

Similar News

News January 23, 2026

உலகின் பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு!

image

உலகின் பழமையான குகை ஓவியத்தை இந்தோனேசியாவின் கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடித்துள்ளனர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்ட ஆய்வில், ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில் மனிதனால் உருவாக்கப்பட்ட பாறை ஓவியங்களை கண்டுபிடித்தனர். இந்த குகை ஓவியம் சுமார் 67,800 ஆண்டுகள் பழமையானது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

News January 23, 2026

வாய் துர்நாற்றம் வருதா?

image

வாய் துர்நாற்றம் பெரும்பாலும் வாய் & பல் பராமரிப்பு இல்லாதது, செரிமான கோளாறு, கல்லீரல், சிறுநீரக உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறதாம். இதற்கு: *நன்றாக பல் துலக்க வேண்டும். *நாக்கை வழித்தெடுத்து சுத்தம் செய்ய வேண்டும். *வாயை கொப்பளித்தல் அவசியம். * வாயில் உமிழ்நீர் அதிகமாக சுரக்க புளிப்பு உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். *மாதுளை விதையை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிடவும்.

News January 23, 2026

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி

image

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள லேக் கார்ஜெல்லிகோ நகரில், அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயத்துடன் சிகிச்சையில் உள்ளார். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. துப்பாக்கிச்சூடு நடத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர். அமெரிக்காவை தொடர்ந்து ஆஸி.,யையும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிரவைத்து வருகிறது.

error: Content is protected !!