News January 1, 2026
அப்துல்கலாம் பொன்மொழிகள்!

*கரைகளைக் கடக்கும் துணிவிருந்தால் தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும் *அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள். அதுதான் உண்மையான தலைமைப் பண்பு *எல்லா பறவைகளும் மழைக்காலங்களில் கூடுகளில் அடையும். ஆனால் கழுகு, மழையைத் தவிர்க்க மேகத்துக்கு மேலாகப் பறக்கும் *ஒரு தேசத்தின் மகுடமே அதன் சிந்தனையாளர்கள்தான் *மதிப்பீடுகளுடன் கூடிய கல்வி முறையே இன்றைய தேவை
Similar News
News January 2, 2026
கூட்டணி பேச்சுவார்த்தையில் SDPI மும்முரம்

அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த SDPI, அக்கட்சி NDA-வில் இணைந்ததால் கூட்டணியில் இருந்து விலகியது. இந்நிலையில், 2026 தேர்தல் கூட்டணி பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். SDPI அகில இந்திய மாநாட்டுக்கு (ஜன.20) பின் கூட்டணி பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேநேரம், ஆட்சியில் பங்கு என்ற எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
News January 2, 2026
தங்கம் விலை தடாலடியாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) தங்கம் $19.68 அதிகரித்து $4,348.28-க்கு விற்பனையாகிறது. கடந்த 5 நாள்களாக சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $1.24 அதிகரித்துள்ளது. இதனால், இன்றைய தினம் இந்திய சந்தையில் தங்கம் விலை மாறுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 2, 2026
நியூ இயர் Resolution.. நேத்து யாரெல்லாம் Follow பண்ணீங்க

காலையில் சீக்கிரமாக எழுவேன், ஜிம் போவேன், மது- சிகரெட்டை கைவிடுவேன், இனி Life-ல் productive ஆக இருப்பேன் என புத்தாண்டிற்கு முன்பு பல Resolution-களை எடுத்திருப்பீர்கள். ஆண்டின் முதல்நாள் கடந்தாகி விட்டது. எடுத்த Resolution-ஐ நேற்று ஒருநாள் யாரெல்லாம் கரெக்ட்டா பண்ணீங்க. அப்படி இல்லாம யார் பொங்கல் வரைக்கும் லீவு விட்டுடீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.


