News April 11, 2024

அப்துல்கலாமின் பேராசிரியர் காலமானார்

image

திருச்சியைச் சேர்ந்த லாடிஸ் லாஸ் சின்னதுரை (101) திருச்சியில் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்று, அதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர். இவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு ஆசிரியராக இருந்தவர். இயேசு சபையில் தனது 41வது வயதில் இணைந்து 1970 மார்ச் 13ல் பங்கு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று திண்டுக்கல் பெஸ்கி இல்லத்தில் காலமானார்.

Similar News

News January 28, 2026

திருச்சி: விபத்தில் கல்லூரி மாணவி பலி

image

திருச்சியில் இருந்து முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் பைக் மீது, கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சாலினி (21) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த மாணவர் திருச்சி GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிந்து பேருந்து ஓட்டுநரை கைது செய்தனர்.

News January 28, 2026

திருச்சி மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

image

திருச்சி மாவட்டம் நீதிமன்ற வளாகம், வையம்பட்டி, குணசீலம், வேங்கமண்டலம், நடுப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.29) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 9:45 மணி முதல் 4 மணி வரை மின் தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க!

News January 28, 2026

திருச்சி: 131 கம்பெனிகள் மீது நடவடிக்கை

image

குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய பண்டிகை விடுமுறை தினத்தை முன்னிட்டு, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 178 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத 131 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் தங்கராசு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!