News September 26, 2025

அன்று கட்டை விரல், இன்று NEP: தியாகராஜன் குமாரராஜா

image

துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார், ராஜகோபாலாச்சாரியார் வரை நாம் படிப்பதை தடுத்துக் கொண்டே இருந்தார்கள் என்று ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தெரிவித்தார். முன்பு, ஏகலைவனிடம் கட்டை விரலை காணிக்கையாக கேட்டதை போல, கற்றவை எல்லாம் மறந்து போக வேண்டும் என கர்ணனுக்கு சாபம் கொடுத்தது போல, இன்று புதிய கல்விக் கொள்கை (NEP) வந்துள்ளதாகவும் கூறினார்.

Similar News

News September 26, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை
▶குறள் எண்: 470
▶குறள்:
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
▶பொருள்: தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்ட மாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்.

News September 26, 2025

நட்புக்கு இலக்கணம் அண்ணாமலை: டிடிவி தினகரன்

image

அண்ணாமலையின் தூண்டுதலே தனது செயல்பாடுகளுக்கு காரணம் என சிலர் சொல்வது முற்றிலும் தவறு என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நட்புக்கு சிறந்த இலக்கணம் அண்ணாமலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவரே பதில் அளித்துள்ளார் என தெரிவித்த டிடிவி, அவர் எல்லாவற்றையும் கடந்து தனது செயல்பாடுகளால் உயர்ந்த நிலைக்கு வருவார் எனவும் கூறியுள்ளார்.

News September 26, 2025

சித்தராமையா கோரிக்கைக்கு NO சொன்ன விப்ரோ நிறுவனர்

image

பெங்களூருவில் போக்குவரத்தை கட்டுப்படுத்த விப்ரோ வளாக சாலையில், பொது வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என CM சித்தராமையா வேண்டுகோள் வைத்திருந்தார். ஆனால் CM கோரிக்கையை விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி நிராகரித்தார். விப்ரோ வளாகத்தில் பொதுமக்களை அனுமதிப்பது நீண்டகால தீர்வு அல்ல என அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம் போக்குவரத்தை சரிசெய்ய தொழில்நுட்பம் சார்ந்து உதவ தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளார்.

error: Content is protected !!