News March 20, 2026
அன்புமணி, TTV அவசர டெல்லி பயணம்

NDA கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், டெல்லியில் அமித்ஷாவை EPS நேரில் சந்தித்துள்ளார். இந்நிலையில் கூட்டணி தலைவர்களான அன்புமணி, TTV தினகரன் ஆகியோரும் நாளை டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்பட்டு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
Similar News
News April 7, 2026
பெரம்பூரில் விஜய்யின் வேட்புமனு ஏற்பு

பெரம்பூரில் விஜய்யின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. பெரம்பூர், திருச்சி கிழக்கில் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் வயது, வழக்கு உள்ளிட்ட விவரங்களில் குளறுபடி இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அந்த தவறுகளை திருத்தம் செய்து மேலும் 2 பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்த நிலையில், அவரின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
News April 7, 2026
ஆந்திராவின் தலைநகர் அமராவதி: அரசிதழ் வெளியீடு

ஆந்திராவின் தலைநகர் அமராவதியை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து அரசிதழும் வெளியிட்டுள்ளது. இதனை அம்மாநில CM, DCM உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். முன்னதாக, ஆந்திரா பிரிக்கப்பட்டபோது தெலுங்கானாவின் தலைநகராக ஹைதராபாத் மாறியது. 2019-ல் YSR காங்., ஆட்சியின்போது ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் என அறிவித்தார். பின்னர், 2024-ல் TDP ஆட்சி அமைத்தவுடன் அமராவதியை தலைநகராக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
News April 7, 2026
Flight-ல் கோடிகளை கொண்டு வரும் அமித்ஷா: வைகோ

PM மோடி, அமித்ஷா பிரசார வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனையிடுவார்களா என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டாலின் காரை 24 மணி நேரத்திற்குள் 2-வது முறை சோதனை செய்யப்படுவதாக கூறிய அவர், அமித்ஷா விமானத்தில் வரும்போது எத்தனை கோடிகளை கொண்டு வருகிறார் என யாருக்காவது தெரியுமா என குற்றஞ்சாட்டினார். அமித்ஷா கொடுக்கும் தைரியத்தில் தான் ஸ்டாலின் காரை மட்டும் EC சோதனையிடுவதாகவும் சாடியுள்ளார்.


