News November 7, 2025
அன்புமணி புதிய கட்சி தொடங்கலாம்: ராமதாஸ்

பாமக பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்புமணி பக்கம் உள்ள கும்பலில் 21 பேர் இருப்பதால், அதை பயன்படுத்தி அவர் புதிய கட்சி தொடங்கி கொள்ளட்டும் என்று ராமதாஸ் அறிவுரை வழங்கியுள்ளார். அக்கட்சிக்கு பொருத்தமான பெயரை தானே சொல்வதாகவும், ஆனால் அன்புமணிக்கு பாமகவுடனும், தன்னுடனும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், ராமதாஸ் கூறியுள்ளார்.
Similar News
News February 19, 2026
கழுத்து வலி பிரச்னையா?

தினமும் காலை எழுந்து கொள்ளும்போதே சிலர் கழுத்து வலியுடன் எழுவார்கள், அதற்கு அவர்கள் பயன்படுத்தும் தலையணை முக்கிய காரணம். தலையணை சரியாக இல்லையெனில், கழுத்து, தோள்பட்டை வலி, உடல் சோர்வு போன்றவற்றுடன் சேர்ந்து, தூக்கமின்மை பிரச்னைகளும் வர வாய்ப்புள்ளது. இதனால் எடை கூடுதல், மன அழுத்தம் ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் பிரச்னை வரும். ஆகவே, மெல்லிய, சுத்தமான தலையணையே பயன்படுத்துங்கள்.
News February 19, 2026
TN வளர்ச்சிக்கு இளைஞர்களின் துணை முக்கியம்: CM ஸ்டாலின்

திமுக ஆட்சியில் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு ₹177 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் பேசிய அவர் விளையாட்டு வீரர்கள் ஹெல்தியாக இருந்தால் தான் மாநிலமும் ஹெல்தியாக இருக்கும் என்றும், TN-ன் வளர்ச்சிக்கு இளைஞர்கள் துணை நிற்க வேண்டும் எனவும் கூறினார். இந்நிகழ்வில் செம்மஞ்சேரியில் ₹261 கோடியில் அமையவுள்ள விளையாட்டு நகரத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
News February 19, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஆள்வினையுடைமை
▶குறள் எண்: 614
▶குறள்:
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.
▶பொருள்: ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.


