News December 14, 2025

அன்புமணி பணமோசடி செய்கிறார்: ராமதாஸ்

image

PMK பெயரையோ, கொடியையோ அன்புமணி பயன்படுத்த உரிமை இல்லை என ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், விருப்ப மனு என்ற பெயரில் அவர் பணமோசடியில் ஈடுபடுவதாக ECI & DGP-யிடம் ராமதாஸ் தரப்பு புகார் மனு அளித்துள்ளது. முன்னதாக 2026 தேர்தலில் PMK சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் விருப்ப மனுக்களை பெறலாம் என அன்புமணி அறிவித்திருந்தார். பொது தொகுதிக்கு ₹10,000, தனித் தொகுதிக்கு ₹5,000 செலுத்தி மனுவை பெறலாம்.

Similar News

News March 10, 2026

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு… மக்களுக்கு அதிர்ச்சி

image

கடந்த தேர்தலில், 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி என்ற திமுகவின் வாக்குறுதி வரவேற்பை பெற்றது. இது திமுகவின் வெற்றிக்கும் உதவியது. இந்நிலையில், நேற்று திருச்சி திமுக மாநாட்டில், நகைக்கடன் தள்ளுபடி பற்றி மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிவிப்பு வெளியாகாதது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனினும், விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 10, 2026

திமுக கலக்கத்தில் உள்ளது: PM மோடி

image

NDA-வுக்கு TN மக்களிடம் கிடைக்கும் ஆதரவைப் பார்த்து திமுக கலக்கத்தில் உள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். நாளை திருச்சியில் நடக்கும் NDA மாநாட்டில் பங்கேற்பது பற்றி X-ல் குறிப்பிட்டுள்ள அவர், திமுகவின் மோசமான நிர்வாகம், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை மக்கள் கவனித்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். அதன் காரணமாகவே NDA-வின் வளர்ச்சி கொள்கையுடன் மக்கள் தங்களை இணைத்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 10, 2026

வங்கதேசத்திற்கு 5,000 டன் டீசல் அனுப்பும் இந்தியா

image

வங்கதேசத்தில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க இந்தியாவிடம் இருந்து அந்நாடு 5,000 டன் டீசலை பைப்லைன் மூலம் பெறவுள்ளது. ஆண்டுதோறும் 1,80,000 டன் டீசல் வழங்குவதற்காக இந்தியாவுடன் ஒப்பந்தம் உள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக தற்போது டீசல் வழங்கப்பட உள்ளதாம். போர் பதற்றங்களால் எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நேரத்தில், இந்தியாவிடம் இருந்து வங்கதேசம் டீசல் பெறுவது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!