News December 26, 2025

அன்புமணியுடன் பேசினால் சட்ட நடவடிக்கை

image

டெல்லி HC தீர்ப்பின் மூலம் அன்புமணிக்கு பாமகவின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்தும் உரிமையில்லை என்பது உறுதியாகியுள்ளதாக பாமக சமூக நீதிப் பேரவை தெரிவித்துள்ளது. எனவே, பாமக பெயரில் அன்புமணி தொடர்புடையவர்களுடன் அரசியல், தேர்தல் (அ) நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொண்டால் சட்டப்படி குற்றமாகும் எனவும் கூறியுள்ளது. இதை மீறி செயல்படுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

Similar News

News December 31, 2025

TN அரசுக்கு அளவுக்கு மிஞ்சிய கடனா? சிவசங்கர் விளக்கம்

image

TN அரசு மற்ற மாநிலங்களை விட கூடுதல் கடன் பெற்றதாக EPS உள்பட எதிர்கட்சியினர் வைத்த குற்றசாட்டுக்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார். ஒரு மாநிலம் எவ்வளவு கடன் வாங்க முடியும் என்பதற்கு மத்திய அரசு வரையறுத்துள்ள குறியீடுக்கு கீழ்தான், TN கடன் பெற்றுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். எதிர்கட்சியினர் தமிழகத்துடன் ஒப்பிடும் பல மாநிலங்கள், அளவுக்கு மீறி கடன் வாங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

News December 31, 2025

மதுவை தொடமாட்டேன்: New year சபதம் எடுத்துட்டீங்களா?

image

புத்தாண்டு பிறந்தாலே குடிமகன்கள் பலரும் இனி சரக்கை ஒருபோதும் தொடவே மாட்டேன் என ஒவ்வொரு ஆண்டும் அதிரடி சபதம் எடுப்பார்கள். ஆனால் அப்படி திடீரென்று மதுவை நிறுத்துவது அதிக மது அருந்துபவர்களின் உடல்நலனை பாதிக்கும் என்கிறார் அமெரிக்க உடல்நல நிபுணர் ட்ரான்சோ. மேலும், மதுவை ஒரேடியாக நிறுத்துவதற்கு பதில், Sober curious மனநிலையுடன் வாரத்திற்கு 1,2 பாட்டில்களை குறைப்பது நல்லது என அறிவுறுத்தியுள்ளார்.

News December 31, 2025

BREAKING: பொங்கல் பரிசை அறிவித்தது தமிழக அரசு

image

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க அரசு திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ₹248 கோடி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசு, 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதில் ரொக்கப்பணம் குறித்த எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

error: Content is protected !!