News January 11, 2026
அன்புமணிக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்

அன்புமணி தரப்பு பாமக அதிமுக கூட்டணியில் இணைந்த நிலையில், தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்கு அன்புமணிக்கு அதிகாரமில்லை என ECI-க்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக பெயரை அன்புமணி சட்டவிரோதமாக பயன்படுத்துவதாகவும், இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 28, 2026
கடைசிவரை நிறைவேறாமல் போன அஜித் பவாரின் ஆசை

மகாராஷ்டிரா அரசியலின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இடத்தில் இருந்த அஜித் பவாரின் ஆசை கடைசிவரை நிறைவேறவே இல்லை. முதல்வராக வேண்டும் என்ற தனது கனவை பலமுறை பொதுமேடைகளிலேயே பவார் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். முதல்வராக அரசியல் களத்தில் மேற்கொண்ட காய் நகர்த்தல்கள் அவருக்கு கடைசிவரை கைகொடுக்கவில்லை. மகாராஷ்டிராவில் 6 முறை DCM-ஆக இருந்தவர் என்ற பெருமையை பெற்ற அவரால், கடைசிவரை முதல்வராக முடியவில்லை.
News January 28, 2026
BREAKING: புதுவையில் விஜய் கட்சி போட்டியிடவில்லையா?

ECI விதிகளின்படி, ஒரு கட்சி ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் போட்டியிட விரும்பினால் அதை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். ஆனால் விஜய் சமர்பித்த விண்ணப்பத்தில் தமிழ்நாடு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி இடம்பெறவில்லை. இதனால் தவெக புதுச்சேரியில் போட்டியிடவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. மறுபுறம் புதுச்சேரியில் வேறு சின்னத்தில் போட்டியிட விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
News January 28, 2026
அஜித் பவார் சென்ற Charter Plane விமானம் பற்றி தெரியுமா?

மும்பை – பாராமதி செல்லும்போது ‘Charter Plane’ விபத்துக்குள்ளானதில் MH DCM சரத் பவார் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வகை விமானமானது தனிநபர் (அ) ஒரு குழுவாக செல்ல ஏற்ற வகையில் 4-6, 6-10, 15+ சீட் வகைகளில் உயர்ரக அம்சங்களுடன் இருக்கும். இதில் ஒருமுறை டெல்லி – மும்பை பயணம் செய்ய மொத்தம் ₹10 லட்சம் வரை செலவாகும். Falcon வகை விமானம் 2000 & Hawker 800 XP விமானம் வேகமாகவும் பயணிக்கும்.


