News December 19, 2025
அன்னியூரில் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் அரசு கலைக்கல்லூரி கட்டப்படவுள்ள இடத்தினை உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் இன்று (டிச.19) நேரில் ஆய்வு செய்தார். தற்போது தற்காலிகமாக கல்லூரி அன்னியூர் அரசு பள்ளிக்கட்டித்தில் இயங்கி வருகின்றது. ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ அன்னியூர் சிவா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெளதமசிகாமணி உடனிருந்தனர்.
Similar News
News December 21, 2025
விழுப்புரம்: சேலையில் தீ பற்றி இளம்பெண் பலி!

விழுப்புரம்: கழிக்குப்பத்தைச் சேர்ந்த சுசீலா, தனது மகன் சுமன், மகள் அனுசுயா (26) வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சுசீலா மற்றும் சுமன் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், அனுசுயா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, வாசலில் வைத்திருந்த விளக்கில் இருந்து அனுசுயா சேலையில் தீ பற்றியதில் தீ காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
News December 21, 2025
விழுப்புரத்தில் பைக் – பஸ் மோதி கோர விபத்து!

விழுப்புரம்: சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜானகிபுரம் மேம்பாலம் பகுதியில் நேற்று விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் நிலை தடுமாறி பேருந்து மீது மோதியதில், மூவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு உடனடியாக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 21, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


