News December 24, 2025
அன்னப்பூர்ணா திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதிகள் (2/2)

அன்னப்பூர்ணா திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் ஃபுட் கேட்டரிங் துறையில் சுயதொழில் தொடங்க விரும்புபவராக இருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரரால் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சொந்தமாக நிர்வகிக்கப்பட வேண்டும். உணவுக் கடைகள், கேன்டீன்கள், டிபன் கடைகள் போன்று சிறுதொழிலாக இருக்க வேண்டும். வங்கிகளில் சென்று விண்ணப்பித்த பிறகு, ஆய்வு செய்யப்பட்டு கடன் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 25, 2025
பெரம்பலூர்: சொந்த ஊரில் வேலை வாய்ப்பு!

பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய பூமாலை வளாகத்தில், மகளிர் சுய உதவிக் குழு தயாரிப்புகளுக்கான பொது சந்தை வசதி மையம் (CMFC) அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒருங்கிணைப்பாளர் பணிக்குத் தகுதியான பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் டிச.31-க்குள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இது குறித்த தகவலுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்புகொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News December 25, 2025
பெரம்பலூர்: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் உதவி!

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம், பி.சி, எம்.பி.சி, மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கு தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. சிறுதொழில் தொடங்க நினைப்போர், இந்த கடனுதவியை பெற <
News December 25, 2025
பெரம்பலூர்: நாளை இதனை மறக்காதிங்க

பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை (டிச.26), வெள்ளிக்கிழமை காலை 10:30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக 2வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படவுள்ளது. என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.


