News December 15, 2025

அனைவரும் சமமாக நடத்தப்படுவதில்லை: நடிகை

image

இந்த நாட்டில் அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்படுவதில்லை என்று கேரள பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை வேதனை தெரிவித்துள்ளார். ஒரு குற்றவாளியை பொருத்தவரை, வழக்கு கையாளப்பட்ட விதத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அரசுத் தரப்பு கவனித்ததாகவும் கூறியுள்ளார். 6 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியதற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் திலீப் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 25, 2025

இந்தியாவின் முதல் அரசி: விஜய்

image

வேலுநாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி தனது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு விஜய் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். தனது X பதிவில் விஜய், வீரத்தின் விளைநிலமான தமிழ் மண்ணிலிருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடி வெற்றி கண்டவர் வேலுநாச்சியார் என்றும், அவர் இந்தியாவின் முதல் அரசி, சமூக, சமய நல்லிணக்கத்தைப் பேணியவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

News December 25, 2025

முக்கிய மாவோயிஸ்ட் தளபதி என்கவுண்டர்

image

தலைக்கு ₹1.1 கோடி விலை நிர்ணயிக்கப்பட்ட மாவோயிஸ்ட் முக்கிய தளபதி கணேஷ் உய்க்கை (69) பாதுகாப்பு படையினர் என்கவுண்டர் செய்தனர். ஒடிசாவில் உள்ள ரம்பா வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், 2 பெண்கள் உள்பட மொத்தம் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். CRPF, BSF என மொத்தம் 23 குழுக்கள் இந்த வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், கொல்லப்பட்டவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

News December 25, 2025

அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை ராதிகா

image

அரசியலில் கலக்கி வரும் நடிகை ராதிகா, மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர முடிவு செய்துவிட்டாரோ..! என பலர் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘தாய் கிழவி’ படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதில், முற்றிலும் அடையாளம் தெரியாத அளவில் ‘கிழவி’ கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார். இப்படம் வரும் பிப்.20-ல் வெளியாகவுள்ளது.

error: Content is protected !!