News December 21, 2025
அனைத்து ரேஷன் கார்டுக்கும்.. வெளியான ஹேப்பி நியூஸ்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பாமாயிலுக்கு வழங்கப்படுவதைப்போல், தேங்காய் எண்ணெய்க்கு ₹100 மானிய தொகை வழங்கினால் விலை குறையும் என்றும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்வது குறித்து CM ஸ்டாலினிடம் ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்துள்ளார்.
Similar News
News February 8, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 8, தை 25 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM – 2:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: சப்தமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
News February 8, 2026
தவெகவை வம்புக்கு இழுத்த உதயநிதி

விருதுநகரில் நடைபெற்ற இளைஞரணி மாநாட்டில் தவெகவை மறைமுகமாக உதயநிதி ஸ்டாலின் அட்டாக் செய்து பேசினார். கொள்கை, லட்சியம் என்றால் என்னவென்று தெரியாமல் கட்டுப்பாடின்றி வெற்றுக் கூச்சல் போடும் ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் சுற்றுகிறது என்று சாடிய அவர், அவர்களால் தமிழ்நாட்டிற்கு எந்தவித பயனும் இல்லை; இன்னும் சொல்லப்போனால் அவர்களால் அவர்களுக்கே எந்த பயனும் கிடையாது என்று தெரிவித்தார்.
News February 8, 2026
புதிய மாவட்டம்.. திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் அதிமுக

திமுக ஆட்சிக்கு வந்ததும் பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்படும் என தற்போதைய பழனி MLA செந்தில்குமார் உறுதி அளித்தார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவு பெறவிருக்கும் நிலையில், அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனை கண்டித்தும், பழனி மாவட்டத்தை அறிவிக்கக் கோரியும் பிப்.10-ல் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக, பாஜக அறிவித்துள்ளன.


