News October 22, 2025

அனைத்து மீட்பு உபகரணங்களும் தயார் நிலை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மாவட்டத்திலுள்ள அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருக்கோவிலூர் நகராட்சியில் மீட்டு உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளதாக திருக்கோவிலூர் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 1, 2026

கள்ளக்குறிச்சி: தாய்மார்களுக்கு ரூ.11,000!

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 1515-ஐ அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.

News February 1, 2026

கள்ளக்குறிச்சி அருகே இளைஞர் துடிதுடித்து பலி!

image

கள்ளிப்பாடி பகுதியைச் சேர்ந்த நடராஜ் கடந்த 28-ஆம் தேதி சொந்த வேலையாக சங்கராபுரம் வருவதற்காக சங்கராபுரம் பகுதியில் உள்ள முருகன் எலக்ட்ரிக் கடை அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்திசையில் வந்த தருண் குமார் ஒட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடராஜ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

News February 1, 2026

மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்

image

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரங்கப்பனூர் ஊராட்சியை சிறந்த ஊராட்சி என கடந்த குடியரசு தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் விருது பெற்றார். இந்த நிகழ்வை தொடர்ந்து இன்று (ஜன.2) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜ் ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் சந்தித்து விருதை வழங்கி வாழ்த்து பெற்றார்.

error: Content is protected !!