News February 16, 2026
அனைத்து மகளிருக்கும் ₹2,000.. புதிய அப்டேட்

TN அரசு வழங்கிய கோடைக்கால சிறப்புத் தொகை ₹2,000-ஐ அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என CM CELL-க்கு பலரும் கோரிக்கை விடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இந்த விவகாரத்தில், பணம் கிடைக்காத சுமார் 90 லட்சம் குடும்பத் தலைவிகள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால், விடுபட்டவர்களுக்கு ₹2,000 வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக முக்கிய தகவல் கசிந்துள்ளது.
Similar News
News February 21, 2026
OPS-ன் திமுக ஆதரவால் மீண்டும் அரசியல் மோதலா?

OPS-ன் திடீர் திமுக ஆதரவு, அவர் விரைவில் திமுக கூட்டணியில் இணைவதற்கான சமிக்ஞையே என கூறப்படுகிறது. ஒருவேளை அவர் திமுகவோடு இணைந்தால், தேனி திமுக முகமாக இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் உடன் மீண்டும் மோதல் உண்டாகும் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். தொகுதி போட்டி, ஆதரவாளர்கள் மோதலும் உண்டாகலாம் என்றும் கூறப்படுகிறது. என்ன முடிவெடுப்பார் ஓபிஎஸ்? உங்கள் கருத்தை கமெண்ட்டில் சொல்லுங்கள்.
News February 21, 2026
BREAKING: அதிமுக வெளியிட்ட முக்கிய ஆதாரம்!

அமைச்சர் KN நேரு மீதான ₹ 1,020 கோடி ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, ED அனுப்பிய கடிதத்தின் முக்கிய ஆவணத்தை அதிமுக வெளியிட்டுள்ளது. ஆவணத்தின் 51-வது பக்கத்தில் டெண்டர்களுக்காக 7.5% – 10% வரை கட்சி நிதி(Party Fund) பெயரில் வசூலிக்கப்பட்டுள்ளதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. அமைச்சர், அவரது மகனை காப்பாற்றவே காவல்துறை FIR பதிவு செய்யாமல் இருப்பதாகவும் சாடியுள்ளது.
News February 21, 2026
தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு: திருப்பூரில் 6 பேர் கைது

பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக SM-ல் பதிவிட்டதாக திருப்பூரில் பதுங்கியிருந்த 6 பேரை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது. மேலும் அவர்களிடமிருந்து 8 செல்போன்கள் & 16 சிம் கார்டுகளையும் பறிமுதல் செய்துள்ளது. அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்த நிலையில், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


