News December 20, 2025

அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. டிச.10-ம் தேதி தொடங்கிய தேர்வுகள், 23-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளன. இதையடுத்து, டிச.24 முதல் ஜன.4 வரை மாணவர்களுக்கு லீவுதான். இதில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளும் அடங்கும். மொத்தமாக 12 நாள்கள் விடுமுறை கிடைப்பதால் அதனை கொண்டாட முன்கூட்டியே திட்டமிடுங்கள். வெளியூர் செல்ல அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. SHARE

Similar News

News December 23, 2025

இதுதான் ‘அரசன்’ கதையா?

image

மதுரையில் கபடி வீரராக இருக்கும் STR, வடசென்னைக்கு விளையாட்டு போட்டிக்காக வருகிறார். அங்கே, எதிர்பாராத சூழலில், ஒரு பெரிய ரவுடியை கொலை செய்துவிடுகிறார். இக்கொலை மூலம் வடசென்னையின் குணா, செந்திலுடன் சந்திராவுடன் STR-க்கு தொடர்பாகிறது. அதன் மூலம் வளரும் பகையில் அவர், எப்படி சென்னையின் பெரிய தாதாவான விஜய் சேதுபதியை எதிர்கொள்கிறார் என்பதே அரசனின் கதை என தகவல் வெளிவந்துள்ளது.

News December 23, 2025

இந்திய U-19 வீரர்கள் ஆத்திரமூட்டினர்..

image

இந்திய U-19 வீரர்கள் குறித்து ICC-யிடம் புகார் அளிக்க உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.
பைனலில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பாக்., வீரர்களை வம்பிழுத்ததாக குறிப்பிட்ட அவர், அவர்கள் நடந்து கொண்ட விதம் ஆத்திரமூட்டும் வகையில் இருந்ததாக கூறினார். மேலும், எப்போதும் விளையாட்டையும் அரசியலையும் தனித்தனியாகவே பார்க்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

News December 23, 2025

காபி பிரியர்களுக்கு அதிர்ச்சி!

image

தமிழகத்தில் முன்னணி நிறுவனங்களின் காபி தூள் விலை கிலோவிற்கு ₹980-ல் இருந்து, ₹1,100 ஆக அதிரடி உயர்வை கண்டுள்ளது. இந்தியாவில் அதிகம் இறக்குமதி செய்யப்படும் பிரேசில், வியட்நாமில் உள்ள காபித் தோட்டங்கள் அழிந்ததே விலை உயர்வுக்கு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த 2022-ல் ஒரு கிலோ காபி தூள் ₹500-க்குள் இருந்தது. அடுத்த 3 ஆண்டுகளில் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!