News December 15, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு

சமூக நலத்துறை தரப்பில் கடந்த மாதம் எடுத்த கணக்கெடுப்பில், 4,68,554 மாணவர்களில் 2,87,997 மாணவர்கள் மட்டுமே காலை உணவுத் திட்டத்தை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி அடைந்துள்ளதாம். இதனால், இத்திட்டத்தின் செயலாக்கம் குறித்து பள்ளிகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க தொடக்கக்கல்வி இயக்குநர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 20, 2025
யுவராஜ் சிங்கின் ₹2.5 கோடி சொத்துகள் முடக்கம்

யுவராஜ் சிங், உத்தப்பா, நடிகைகள் நேஹா சர்மா, ஊர்வசி ரவுதேலா உள்ளிட்டோரின் சொத்துகளை ED முடக்கியுள்ளது. சட்டவிரோத சூதாட்ட செயலிகள் கோடிக்கணக்கில் பண முறைகேடு செய்த வழக்கை ED விசாரித்து வருகிறது. அதன் விளம்பரங்களில் நடித்ததன் மூலம் பெற்ற பணத்தில் அவர்கள் சொத்துகளை வாங்கியது உறுதியானது. இந்நிலையில், யுவராஜின் ₹2.5 கோடி, சோனு சூட்டின் ₹1 கோடி என மொத்தமாக ₹7.93 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
News December 20, 2025
பொங்கல் பரிசு ₹4,000.. ஜாக்பாட்

பொங்கல் ரொக்கப்பணம் மற்றும் மகளிர் உரிமைத்தொகையை ஒரே நேரத்தில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக மகளிர் உரிமைத் தொகை 15-ம் தேதி வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஆனால், ஜன.15 பொங்கல் வருவதால், முன்கூட்டியே மகளிர் உரிமைத்தொகை ₹1,000 + பொங்கல் பணம் ₹3,000 என மொத்தம் ₹4,000 வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
News December 20, 2025
விஜய் = திமுக வெறுப்பு: திருமாவளவன்

கட்சியை வளர்க்க வேண்டும் என்பதை விட திமுகவுக்கு எதிராக அவதூறு பரப்ப வேண்டுமென்பதே விஜய்யின் செயல்திட்டமாக உள்ளதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். இதுவரை, மக்களுக்கு என்ன செய்ய போகிறார்? எப்படி ஊழலை ஒழிக்கப்போகிறார்? தமிழகத்தை எப்படி மேம்படுத்த போகிறார்? என ஒருநாளும் பேசவில்லை என்று விமர்சித்துள்ளார். எந்நேரமும் திமுக வெறுப்பு என்ற போக்கிலேயே விஜய் பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


